• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் செயலாளருக்கும் புனித ஜூட் சிறுவர் நோய் பற்றிய ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் இடையில் கைச்சாத்திடப்படும் புனித ஜூட் உலகளாவிய அமைப்பின் மருத்துவ நிறுவன உறுப்புரிமை ஒப்பந்தம்
– இலங்கையில் ஆண்டொன்றில் புற்றுநோயால் பாதிக்கப்படும் 600 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் சிறுவர் நோய் பிரிவினால் புதிதாக இனங்காணப்படுகின்றனர். நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குழந்தைகளின் சுகமாகும் மட்டம் வலையத்திலுள்ள நாடுகளையும் ஏனைய உலக நாடுகளையும்விட சாதகமான மட்டத்தில் நிலவுகின்ற போதிலும் இந்த நிலைமையை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கு வாய்ப்பு நிலவுகின்றதென கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சிறுவர் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே உலகளாவிய மருத்துவ நிறுவனங்களின் வலையமைப்பான புனித ஜூட் உலகளாவிய அமைப்புடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் சிறுவர் புற்றுநோய் சிகிச்சையினை மேம்படுத்துவதற்கான சாத்தியம் நிலவுகின்றதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க புனித ஜூட் உலகளாவிய அமைப்பின் உறுப்பு நிறுவனமொன்றாக இணைந்துக் கொள்ளும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்காக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.