• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளை கண்காணிக்கும் பொருட்டு International Maritime Setellite Service (INMARSAT) சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை ரெலிகொம் நிறுவனத்திட மிருந்து INMARSAT சேவையைப் (Point of Service Activation PSA) பெற்றுக் கொள்ளல்
– இந்து சமுத்திர டூனா ஆணைக்குழுவின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக சர்வதேச கடல்களில் தொழில் புரியும் பல்தின கடற்றொழில் படகுகள் சகலவற்றுக்கும் செய்மதி தொழிநுட்பத்தில் செயற்படும் கண்காணிப்பு முறைமையொன்றை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய சங்கத்தின் ஒழுங்குவிதிக்கு அமைவாகவும் ஐரோப்பிய சங்கத்திற்கு மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கப்பல் கண்காணிப்பு முறைமைகளை பொருத்தியிருத்தல் வேண்டும். இதற்கிணங்க கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச கடலில் பலநாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் 1,500 மீன்பிடி கப்பல்களுக்கு 1,500 டிரான்ஸ்பொன்டர்கள் அரசாங்க தலையீட்டின் மீது வழங்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஷ்பொன்டர்களுக்கான செய்மதி சேவைகளை வழங்குவதற்குரிய ஒப்பந்தமானது தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளதோடு இந்த சேவைகளை தொடர்ந்தும் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் ஊடாக வழங்கும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடான 13.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொள்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.