• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌிநாடுகளில் சேவை புரியும் இலங்கையர்களுக்காக சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றைத் தாபித்தல்
– இலங்கையர்கள் ஒரு மில்லியனுக்கு மேல் வௌிநாடுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளதோடு, தற்போது நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைக்கும் பிரதான தோற்றுவாயாக இந்த வௌிநாட்டு ஊழியர்கள் மாறியுள்ளார்கள். இருப்பினும் வௌிநாட்டு ஊழியர்கள் அவர்களினதும் அவர்களில் தங்கி வாழ்வோரினதும் சமூக பாதுகாப்புக்கு ஏதேனும் தொகையொன்றை சேமிப்பதற்கு முயற்சிப்பதில்லையெனவும் இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வூதிய வயதினை அடைந்ததன் பின்னர் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமையும் அவதானிக்கப்பட்டது. இதற்கு தீர்வொன்றாக 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை மூலம் வௌிநாட்டு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறையினை ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கிணங்க வௌிநாடுகளிலுள்ள ஊழியர்களுக்காக பங்களிப்பு சமூக பாதுகாப்பு நிதியமொன்றை உருவாக்கும் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான ஆரம்ப வரைவினை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.