• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 – 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்'
– மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 43 ஆவது அமர்வுக்கான இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த அணுகுமுறைகளை வெற்றிகொள்வதற்குத் தேவையான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதற்குமாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2015 ஒக்ரோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 30/1 ஆம் இலக்க மற்றும் 2017 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட 34/1 ஆம் இலக்க முன்னைய தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டதுமான 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்னும் தலைப்பில் 2019 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட 40/1 ஆம் இலக்க தீர்மானத்திற்கும் வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கையின் தீர்மானத்தை அறிவித்தல்.
* நிலையான மனித உரிமைகள் கட்டளைகள் / அமைப்புகள் மற்றும் பொறிமுறைகள் உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்புடனும் அதன் முகவர் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுதல் அவர்களுடைய உள்நாட்டு முக்கியத்துவம் மற்றும் கொள்கைகளுக்கு அமைவாக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழினுட்ப உதவிகளை தேவைகேற்ப பெற்றுக் கொள்தல்.
* அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப தற்போதுள்ள பொறிமுறைகளை பொருத்தமானவாறு கடைப்பிடித்தல் உள்ளடங்கலாக அனைத்தும் உள்ளடக்கப்பட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை அடைவதற்கு அரசாங்கத்திற்குள்ள அர்ப்பணிப்பை பிரகடனப்படுத்தல்.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட இலங்கையின் முன்னைய விசாரணை அறிக்கையை மீளாய்வு செய்வதற்கும் அவற்றின் சிபாரிசு களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றத்தினை மதிப்பிட்டு புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழி வதற்குமாக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்.
* 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் உட்பட இலங்கையின் கடப்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் உரிய சனநாயக மற்றும் சட்ட செயல்முறைகள் ஊடாக இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும்.
சட்டத்தின் கீழ் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகள் அதேபோன்று பாதுகாப்பினை முன்னேற்றுவதன் மூலம் நீதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உறுதி செய்தும் சமூகத்தில் பாதிக்கக்கூடிய பிரிவினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியும் மக்களின்பால் அரசாங்கத்திற்குள்ள அர்ப்பணிப்பின் மூலம் எழும் கொள்கைகளை நல்ல நோக்கத்துடன் வௌிப்படுத்தல்.
* ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரேரணையை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை பிரகடனப்படுத்தல்.