• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
23 முன்னுரிமை பாலங்களை வழங்குவதற்கும் பொருத்துவதற்குமான ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல் - பிரான்ஸ் M/s Ellipse Projects SAS நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்பு
– வாகன நெரிசல், வாகன விபத்து மற்றும் உயர் வாகன கையாள்கை செலவினைக் குறைத்தல் போன்றவற்றை நோக்காக கொண்டு 23 முன்னுரிமை பாலங்களை தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கி பொருத்துவது ஏற்றதென இனங்காணப்பட்டுள்ளது. இதன் பொருட்டு பிரான்ஸ் M/s Ellipse Projects SAS நிறுவனத்தினால் பிரேரிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பின் அடிப்படையில் உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதனை மதிப்பிடுவதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்குமாக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.