• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையில் சேவையாற்றி பதவி வெறிதாக்கற் கட்டளை பெற்றுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் அமர்த்துதல்
– மக்களால் எதிர்பார்க்கப்படும் சேவைகளை சிறப்பான விதத்தில் வழங்குவதற்கு பயிற்றப்பட்ட பணியணியொன்று இலங்கை பொலிசினால் பேணப்படுதல் வேண்டும் தற்போது பொலிஸ் திணைக்களத்தில் கணிசமான அளவு வெற்றிடங்கள் நிலவுகின்றதோடு, இந்த வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்து தேவையான பயிற்சியினை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்கு கணிசமான காலமும் பாரிய செலவும் ஏற்கவேண்டி நேரிடும். ஆதலால் தற்போது பொலிஸ் சேவைக்கான ஆரம்ப பயிற்சியினைப் பெற்றுள்ள ஆயினும் தற்போது பல்வேறுபட்ட காரணங்களினால் பதவி வெறிதாக்கற் கட்டளை பெற்றுள்ள உத்தியோகத்தர்களை மீள சேவையில் அமர்த்துவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை பின்பற்றுவதன் மூலம் குறுகிய காலப்பகுதிக்குள் பெரும்பாலானோர்களை மீள சேவையில் அமர்த்தலாமென தெரியவந்துள்ளது. எனவே மீள சேவையில் இணைவதற்கான மேன்முறையீடுகளை உரிய காலப்பகுதிக்குள் முன்வைக்காமையினால் குறித்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் முறையானதும் வௌிப்படைத்தன்மையானதுமான நடவடிக்கையினை பின்பற்றி மீள் பரிசீலனை செய்வதற்கு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் உரிய அதிகாரபீடங்களின் அங்கீகாரத்துடன் இவ்வாறு பதவிகளை வெறிதாக்கியுள்ள உத்தியோகத்தர்களை மீள சேவையில் அமர்த்துவதற்குமாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.