• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் மின்சக்தி முறைமையின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் கருத்திட்டம் - பொதி 01 இன் கீழ் கெரவலப்பிட்டிய 220kV Switching Station நிர்மாணிப்பு ஒப்பந்தம்
- ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் மின்சக்தி முறைமையின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் கருத்திட்டத்தின் பொதி 01 இன் கீழ் கெரவலப்பிட்டிய 220kV Switching Station நிர்மாணிப்பு ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s KEC International Limited நிறுவனத்திற்கு 2,774.89 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.