• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் சிவில் வேலை ஒப்பந்த பொதியொன்றை வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை - மருதங்கேணி வீதியை (B 371) புனரமைப்பதற்கும் / விருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான 04 ஒப்பந்த பொதிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s NEM Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கு 1,684.81 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.