• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு - 2020 (மார்ச் இறுதி)
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் என்பவற்றுக்காக பின்வருமாறு பசளை கொள்வனவு சார்பில் மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* 47,700 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) மெற்றிக் தொன் ஒன்று 268.90 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Agrifert Liven International Trading Limited நிறுவனத்திற்கும்;
* 15,000 மெற்றிக் தொன் Triple Super Phosphate மெற்றிக் தொன் ஒன்று 262.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Valency International Trading Pvt. Ltd. நிறுவனத்திற்கும்;
* 13,600 மெற்றிக் தொன் Muriate of Potash மெற்றிக் தொன் ஒன்று 317.25 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Agri Commodities and Finance நிறுவனத்திற்கும்;
* 3,060 மெற்றிக் தொன் யூரியாவை (Prilled) மெற்றிக் தொன் ஒன்று 285.00 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Agri Commodities and Finance நிறுவனத்திற்கும்.