• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தின் மாலம்பேயில் அமைந்துள்ள நவீன ஆராய்ச்சி அபிவிருத்தி கட்டடத் தொகுதியில் தாபிக்கப்படும் சீன - இலங்கை கூட்டு உயிரியல் தொழினுட்ப ஆய்வுக்கூடம்
- அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளவாறு கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்திற்கும் சீனாவின் யுனான் கிராமிய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சேவைகள் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்புடன் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்துடன் மாலம்பேயில் அமைந்துள்ள நவீன ஆராய்ச்சி அபிவிருத்தி கட்டடத் தொகுதியில் கூட்டு உயிரியல் தொழினுட்ப ஆய்வுக்கூடமொன்றை தாபிப்பது சம்பந்தமாக உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிநுட்ப ஆய்வு கூடத்தை தாபிப்பதற்கு மாலம்பேயில் அமைந்துள்ள நவீன ஆராய்ச்சி அபிவிருத்தி கட்டடத் தொகுதியின் கீழ் மாடியில் நிர்மாணிப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. இந்த பணிகள் இரண்டு அரசாங்கங் களினாலும் செலவுகளை பகிர்ந்துக் கொள்ளும் அடிப்படையில் மேற்கொள்ளப் படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உத்தேச உயிரியல் தொழினுட்ப ஆய்வுக்கூடத்தின் கீழ் மாடியின் இறுதி வேலைகள் மற்றும் சேவைப் பணிகளுக்கான கேள்வியை திணைக்களத்தின் பெறுகை குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s Prosperus Industrial Company (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு கையளிப்பதற்கும் இது தொடர்பில் இரு தரப்பினர்களுக் குமிடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்குமாக உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.