• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிருளப்பனை, கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீட்டு கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு வடிவமைத்து நிர்மாணிக்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்
– கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளுடன்கூடிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வீட்டுத் தேவைகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு நகர புத்துயிரளிப்பு கருத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியிடமிருந்து 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியொன்றை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிதியிலிருந்து ஒரு பகுதியினை பயன்படுத்தி கிருளப்பனை, கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள 624 வீட்டு கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் வடிவமைத்து நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப் பட்டுள்ளவாறு Maga Engineering (Pvt.) Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.