• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அலுமினியம் தூள் இலங்கைக்கு இறக்குமதி செய்தலும் விநியோகித்தலும்
– 2003 ஆம் ஆண்டில் தனியார் துறை மூலம் அலுமினியம் தூள் உள்நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டிற்குத் தேவையான அலுமினியம் தூள் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் Sri Lanka State Trading (General) Corporation கம்பனியினூடாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆயினும், அலுமினியம் தூள் இறக்குமதியின் பொருட்டு நிலவிய சட்டப் பின்னணி தளர்த்தப்பட்டதும் தனியார் துறையினால் உள்நாட்டில் உற்பத்தி செய்யாது தொடர்ந்தும் அலுமினியம் தூள் இறக்குமதி செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த நிலைமையை தடுப்பதற்காக சட்டத் ஏற்பாடுகளை செய்ய வேண்டியத் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க Sri Lanka State Trading (General) Corporation கம்பனியினூடாக அலுமினியம் தூள் இறக்குமதி செய்து, உரிமப்பத்திரம் பெற்றுள்ள உற்பத்தியாளர்கள், உரிமப்பத்திரம் பெற்றுள்ள விற்பனை முகவர்கள் மற்றும் அலுமினியம் தூள் மூலப்பொருளாக பயன்படுத்தும் கைத்தொழில்கள் என்பனவற்றுக்கு மாத்திரம் இதனை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் அலுமினியம் தூள் இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்குமான முழு அதிகாரமும் Sri Lanka State Trading (General) Corporation கம்பனிக்கு வழங்கும் பொருட்டு உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.