• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 சிறுபோகத்திலிருந்து விவசாயிகளுக்கு சுற்றாடல் நட்புறவு மிக்க பசளையினை இலவசமாக வழங்குவதற்கான முன்னோடிக் கருத்திட்டம்
– உயர்தரமிக்க சேதன பசளையினை பயன்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டிலான வழிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென 2020 சனவரி மாதம் 02 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது சம்பந்தமான வழிமுறையொன்றினை தயாரிக்கும் பொருட்டும் பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சேதன பசளைக்கான தரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை யினால் சேதன திரவ பசளை மற்றும் உயிரியல் பசளை போன்றவற்றுக்கும் உரியதான தரங்களை துரிதமாக பிரகடனப்படுத்த வேண்டுமென இந்த குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 250 சேதன பசளை உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு அவர்களுள் 36 பேர்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுற்றாடல் நட்புறவுமிக்க பசளை பாவனைக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் நெல் மற்றும் ஏனைய பயிர்செய்கைகளுக்கு இரசாயன பசளைக்கு பதிலாக சுற்றாடல் நட்புறவுமிக்க பசளை வகைகளை முழுமையாகவோ அல்லது விகிதாசாரத்திற்கு அமைவாகவோ இரசாயன பசளையுடன் இலவசமாக வழங்கும் வழிமுறையொன்றை தயாரித்து முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்னோடிக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களில் ஆகக்குறைந்தது 04 போகங்களுக்கு குறித்த பசளையினை இடுவதன் மூலம் அதன் பயன்பாட்டை நிர்ணயித்து அதன் பெறுபேற்றுக்கு அமைவாக இந்தக் கருத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குமாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.