• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 கல்வி ஆண்டிலிருந்து தகைமை பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்துதல்
- 2024 ஆம் அண்டளவில் பல்கலைக்கழக நுழைவிற்கு தகைமை அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை சுமார் 240,000 வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதோடு அரசாங்கத்தின் புதிய அபிவிருத்தி கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக 2020 கல்வி ஆண்டிலிருந்து உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பினை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதற்கமைவாக, இந்தக் குறியிலக்கை வெற்றி கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை சம்பந்தமாக அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக கல்வி, தொழினுட்ப மற்றும் தகவல் தொழினுட்பம் ஆகிய விடயத்துறைகளைச் சார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.