• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத்தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான வரைவு உடன்படிக்கை
- இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையில் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒருங்கிணைவாக வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடை செய்வதற்குமாக உடன்படிக்கையொன்று உத்தியோகத்தர் மட்டத்தில் 2019 மார்ச் மாதம் 15ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய உடன்படிக்கையினை அரச மட்டத்தில் கைச்சாத்திடுவதற்கும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75(1) ஆம் பிரிவின் பிரகாரம் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையினை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.