• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் பதவி வரையிலுள்ள ஆண் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களில் நீண்ட காலத்திற்கு பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஒரு தடவை மாத்திரம் பதவி உயர்வுகளை வழங்குதல்
- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு வழங்கும்போது கடந்த காலத்தில் உரிய வழிமுறை பின்பற்றப்படாததன் காரணமாக தேவையான தகைமைகளை கொண்டிருந்த போதிலும் பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் பதவி வரையிலுள்ள பதவிகளுக்கு பதவியுயர்வு பெறுவதற்கு ஆண் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு இயலாமற் போயுள்ளது. உரிய ஆட்சேர்ப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கமைவாக உரிய பதவியுயர்வுகள் மேற்கொள்ளப்படாமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகளை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் அண்ணளவாக 50 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் இந்த நிலைமை ஆராயப்பட்டு உரிய பதவியுயர்வுகளை வழங்குவதற்கு திட்டமொன்றினை தயாரித்துள்ளது. இதன் முதல் கட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மேலும் நீண்ட காலம் பதவியுர்வு கிடைக்கப் பெறாத பொலிஸ் கொன்ஸ்டபிள், பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள், பொலிஸ் சார்ஜன், பெண் பொலிஸ் சார்ஜன், உபபொலிஸ் பரிசோதகர், பெண் உபபொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர் பெண் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர்களுக்கு பதவியுயர்வு வழங்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு கொள்கை விடயமொன்றாகக் கருதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.