• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Lanka Mineral Sands Limited நிறுவனத்தினால் அகழப்பட்டு விநியோகிக்கப்படும் கனிம மணல் சார்பில் பெறுமதி சேர்க்கும் கருத்திட்டத்தை அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்துதல்
- தற்போது பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்திகளை விற்பனை செய்வதன் மூலம் ஏனைய நாடுகள் உலக சந்தையில் போட்டியினை உருவாக்கியுள்ளதோடு, மூலப் பொருள் என்னும் வடிவத்தில் கனிம மணல் ஏற்றுமதி செய்வதை விட கனிம மணல் சார்பில் பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்திகளை உலக சந்தைக்கு அனுப்புவது பற்றி கவனம் செலுத்துவது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தினை வெற்றி கொள்வதற்கு Lanka Mineral Sands Limited நிறுவனத்தினால் அகழப்படும் கனிம மணலைப் பயன்படுத்தி அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் கருத்திட்டமொன்றை ஆரம்பித்து பெறுமதிசேர்க்கப்பட்ட ஏற்றுமதி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.