• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய கடன் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநாகலுக்கும் மாகோவுக்கும் இடையே புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் பிரேரிப்பு
- வடக்கு புகையிரதப் பாதையின் குருநாகல் மற்றும் மாகோவுக்கு இடையிலான பகுதியில் நிலவும் தாமதம் காரணமாக காலை மற்றும் மாலை அலுவலக புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தாமதமாவது வழமையான நிலைமையாகும். ஆதலால், வடக்கு நோக்கி செல்லும் பயணிகள் புகையிரதங்களின் பயணக்காலத்தைக் குறைத்து வடக்கு புகையிரதப் பாதையை மீள நிர்மாணிப்பின் மொத்த நலனை எய்துவதற்காக இந்திய கடன் உதவியின் கீழ் சேமிப்பாகவுள்ள நிதியினைப் பயன்படுத்தி குருநாகலுக்கும் மாகோவுக்கும் இடையில் தற்போதுள்ள புகையிரத பாதைக்கு மேலாக மேலதிகமாக விருத்தி செய்யப்பட்ட சைகை முறைமையுடன் கூடிய 43 கிலோமீற்றர்கள் கொண்ட மேலதிகப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கும் உரிய மதியுரைச் சேவைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திட மிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.