• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார முறைமை மேம்பாட்டு கருத்திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு சார்பில் மதியுரை கம்பனியொன்றை தெரிவு செய்வதற்கான கேள்வி
– ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் சுகாதார முறைமை மேம்பாட்டு கருத்திட்டத்திற்கு மதியுரைஞர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கேள்வி சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவு குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசின் பிரகாரம் குறித்த கேள்வியை Sri Lanka Business Development Center நிறுவனத்திற்கு அனைத்து வரித் தொகையும் உள்ளடக்கிய 94.23 மில்லியன் ரூபாவிற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.