• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்துக்கு இடம் நகர்த்துதல் - மேற் கட்டமைப்பின் நிருமாணிப்பு - அதிவேக பாதை இணைப்பு வீதியிலிருந்து உத்தேச மனிங் சந்தை தொகுதி வரை நுழைவு வீதிகளின் இடை இணைப்பு பகுதிகளை அபிவிருத்தி செய்தலும் மேம்படுத்தலும்
– புதிய மனிங் சந்தை கட்டட தொகுதியை பேலியகொடையில் நிர்மாணிக்கும் பணியானது 2016 சனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு இதன் நிர்மாணிப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு 2020 மார்ச் மாதத்தில் பொது மக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய சந்தை கட்டட தொகுதிக்குள்ள பிரதான நுழைவுப் வீதியான ஞானரத்தன மாவத்தை மனிங் சந்தைக்கும் மீன் சந்தைக்கும் திறந்ததன் பின்னர் கட்டுநாயக்கா அதிவேக வீதியுடன் இணையும் வீதியில் கடும் வாகன நெரிசல் உருவாகலாம் என்பதனால் இந்த இடை இணைப்பு பகுதியில் 350 மீற்றர் பகுதியை மிக குறுகிய காலப்பகுதிக்குள் விரிவுபடுத்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தற்போது மனிங் சந்தை கட்டட தொகுதியின் மேற் கட்டமைப்பின் நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் மாகா இஞ்சினியரிங் (பிறைவேட்) கம்பனிக்கு இந்த நிர்மாணிப்பு பணிகளுக்கு ஒருங்கிணைவாக உரிய வீதி பகுதியையும் அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.