• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பு மற்றும் சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்கு அரிசி பாதுகாப்பு கையிருப்புத் தொகையொன்றைப் பேணுதல் (விடய இல.31)
- ஒவ்வொரு ஆண்டும் நவெம்பர், திசெம்பர் மாதங்களில் அரிசி சந்தையில் விலை அதிகரிப்பு காணக்கிடைக்கின்றமையினால் இந்தக் காலப்பகுதிக்குள் விநியோகிப்பதற்காக பாதுகாப்பான அரிசி கையிருப்பொன்றை பேணும் தேவை நிலவுகின்றது. 24,000 மெற்றிக் தொன் அரிசி பாதுகாப்பு கையிருப்புத் தொகையொன்றை பேணுவதற்குத் தேவையான களஞ்சிய இடவசதிகள் தற்போது உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் உள்ளது. அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு பேணப்பட்டு வரும் பாதுகாப்பான அரிசி கையிருப்புத் தொகையை சதொச ஊடாக சந்தைக்கு அரசாங்கத்தின் உத்தரவாத விலையின் கீழ் விநியோகிப்பதன் மூலம் அரிசி விலையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகளை பெற்றுக் கொண்டு சம்பா மற்றும் நாட்டரிசி 20,000 மெற்றிக் தொன் அரிசி பாதுகாப்பு கையிருப்புத் தொகையொன்றினைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கு உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.