• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலைபேறுடைய அரிசி உற்பத்தியின் கீழ் இலங்கையில் உணவு பாதுகாப்புக்கும் பழுதடையாமல் வைப்பதற்குமாக சருவதேச விஞ்ஞான ரீதியிலான ஒத்துழைப்பு
- கமத்தொழில் திணைக்களத்தின் நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் இலங்கையில் நெல் ஆராய்ச்சி சம்பந்தமான பொறுப்பினை வகிக்கின்றதோடு, இலங்கையில் பயிர் செய்யப்படும் சகல நெல் வகைகளும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்களில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இந்த செயற்பாட்டிற்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்கள், மரபியல் வளங்கள் மற்றும் தொழினுட்பம் என்பவற்றை வழங்குவதன் மூலம் பிலிப்பைன்ஸ் சருவதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் அதன் ஒத்துழைப்பை வழங்குகின்றது. இதற்கிணங்க, நடைமுறையிலும் அதேபோன்று எதிர்காலத்திலும் எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றங்களுக்கும் நோய் தொற்றுக்களுக்கும் ஈடுகொடுக்கும் நெல் வகைகளை உற்பத்தி செய்வதற்கு சருவதேச அரசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒத்துழைப்புடன் செயலாற்றும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.