• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'Madrid' உடன்படிக்கையின் கீழ் வர்த்தக மற்றும் சேவை குறியீடுகளை சர்வதேச ரீதியில் பதிவுசெய்தலை நடைமுறைப்படுத்துவதற்காக 'Madrid' நெறிமுறையில் நுழைதலும் இதற்கிணங்க 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்திற்கு திருத்தங்களை செய்தலும்
- புலமைச்சொத்துக்கள் அவலுவலகத்திற்கு அவர்களுடைய வர்த்தக குறியீடுகள் அல்லது சேவை குறியீடுகளை பதிவு செய்வதற்கா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு இந்த அலுவலகத்தின் ஊடாக நேரடியாக சருவதேச ரீதியில் இந்தப் பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தற்போது சட்ட ஏற்பாடுகள் கிடையாது. இதன் பொருட்டு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள புலமைச் சொத்துக்கள் முகவர்களின் ஊடாக வெவ்வேறு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இந்த நிலைமையின் கீழ் வர்த்தக குறியீடுகளைப் பதிவு செய்வதற்கான உலக புலமைச் சொத்துக்கள் அமைப்பினால் நிறுவகிக்கப்படும் 'Madrid' நெறிமுறையில் இலங்கை அரசாங்கம் இணையவேண்டுமென பிரேரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு நீதிமன்ற அதிகார எல்லைகளில் வர்த்தக குறியீடுகளை பாதுகாத்துக் கொள்வதற்கு நம்பத்தகுந்த, இலகுவான மற்றும் செலவு பயனுள்ள வழிமுறையொன்று இந்த 'Madrid' நெறிமுறையில் கிடைக்கப்பெறும் இதற்கிணங்க, இந்த வழிமுறையின் கீழ் சர்வதேச விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதனை இலகுபடுத்துவதன் மூலம் இலங்கை வர்த்தக சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் 'Madrid' நெறிமுறையில் நுழைவதற்கும் இதன் பொருட்டு புலமைச் சொத்துக்கள் சட்டத்திற்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்களை செய்வதற்குமாக உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.