• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய மாதாந்த அங்கத்துவ தொகை கணக்கில் இடப்படுவது பற்றி உடனடியாக அறிவிக்கும் செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையொன்றை நடைமுறைப் படுத்துதல்
- ஊழியர் சேமலாப நிதியத்தில் உறுப்பிரிமைப் பெற்றுள்ள நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 மில்லியன் ஆகும். தற்போது நிலவும் வழிமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பங்களிப்புத் தொகையானது கணக்கிலிடப் பட்டுள்ளதா என்பது பற்றி அறிந்து கொள்வதற்கு 06 - 12 மாத காலங்கள் செல்லுகின்றதோடு, இதன் காரணமாக அங்கத்துவ தொகை கணக்கில் இடப்படுவது சம்பந்தமான பிரச்சினைகள் பலவற்றுக்கு உறுப்பினர்கள் எந்நேரமும் முகங்கொடுக்கின்றமை பற்றி இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நிதியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அவர்களுடைய மாதாந்த அங்கத்துவ தொகை அவர்களுடைய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளதென மாதாந்தம் அவர்களுக்கே உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கணக்கில் இடப்பட்டவுடன் உறுப்பினர்களிால் குறிப்பிடப்படும் செல்லிடத் தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அறிவிக்கும் சேவையொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.