• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதுவரி கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
- மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் அறவிடப்படும் சில வரிகளைத் திருத்துவதற்குரியதாக இந்தக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2019 12 03 ஆம் திகதியிடப்பட்டதும் 2152/11 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 07/2019 ஆம் இலக்கமுடைய மதுவரி அறிவித்தல்;
* 2019 12 03 ஆம் திகதியிடப்பட்டதும் 2152/12 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 08/2019 ஆம் இலக்கமுடைய மதுவரி அறிவித்தல்; அத்துடன்
* 2019 12 03 ஆம் திகதியிடப்பட்டதும் 2152/13 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட 09/2019 ஆம் இலக்கமுடைய மதுவரி அறிவித்தல்.