• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச நாணய நிதியத்தின் அங்கத்துவ நாடுகளுக்கென பங்களிக்கப்பட்டுள்ள உள்ளக வளங்களை கொடையொன்றாகப் பயன்படுத்தி சோமாலியாவின் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு உதவும் பொருட்டு தாபிக்கப்படவுள்ள நிலுவைத் தொகையினை தீர்த்தல் மற்றும் கடன் நிவாரணத்திற்கான நிதிப் பொதி சார்பில் இலங்கையின் பங்களிப்பை வழங்குதல்
- சருவதேச நாணய நிதியத்தின் பிரச்சினைகளை பகிர்ந்துக் கொள்ளும் வழிமுறையானது அதன் நிறைவேற்று சபையினால் 1986 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையொன்றாவதோடு, பல்வேறு காரணங்களின்மீது உறுப்பினர்கள் கட்டணம் செலுத்தாமையினால் நிதியத்திற்கு இல்லாமல் போகும் வருமானத்தை மீள் நிரப்புவதற்கு இந்த வழிமுறையானது வகுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க நிதியத்தின் நிறைவேற்று சபையினால் 2019 திசெம்பர் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட சோமாலியாவின் நிலுவைத் தொகையினை தீர்க்கும் கடன் நிவாரண பொதி சார்பில் அங்கத்துவ நாடுகள் உள்ளக வளங்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குமாறு நிதியத்தினால் அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு இலங்கையின் பங்களிப்பினை வழங்குவது சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கியினாலும், வெளிநாட்டு உறவுகள் அமைச்சினாலும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 163 மில்லியன் ரூபாவிற்கு சமமான தொகையினை இலங்கையின் மொத்த பங்களிப்பாக சோமாலியா கட்டுப்பாட்டு கணக்கிற்கு மாற்றும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.