• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
- கடந்த காலத்தில் சில சந்தர்ப்பங்களில் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவற்காக ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் நாடு பூராகவும் அரசாங்க நிறுவனங்களில் கணிசமான அளவு வெற்றிடங்கள் இன்னமும் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக பின்தங்கிய மற்றும் கிராமபுர பிரதேசங்களில் அரசாங்க அலுவலர்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது அத்தகைய பிரதேசங்களில் வாழும் மக்கள் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், 2012 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வௌியேறிய இன்றுவரை தொழிலற்றுள்ள கிட்டத்தட்ட 50,000 பட்டதாரிகளின் பங்களிப்புடன் இளம் சந்ததியின் திறன்களையும் ஆற்றல்களையும் திரட்டி பாரம்பரிய ரீதியில் பின்பற்றப்பட்ட நிர்வாக கலாசார எல்லைகளுக்கு அப்பால் அரச சேவை வழங்கல் பற்றிய மக்கள் மையப்படுத்தப்பட்ட முறைமையொன்றை பரிணாமித்துக் கொள்ளும் நோக்குடன் தற்போது பின்பற்றப்படும் வழிமுறைகளில் சாதகமான நிலைமாற்றமொன்றை கொண்டுவரும் பொருட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, 2019‑12‑31 ஆம் திகதியில் உள்ளவாறு பட்டமொன்றைப் பெற்றுள்ள அல்லது பட்டமொன்றுக்குச் சமமான அத்தகைய கல்வித் தகைமையை பூர்த்தி செய்துள்ள தொழிலற்ற பட்டதாரிகளையும் இளையோர்களையும் பட்டதாரி பயிலுநர்களாக ஒரு (01) வருட பயிற்சிக்காலத்திற்கு உட்பட்டு, பயிற்சிக் காலத்தின் பின்னர், முதல் நியமன இடத்தில் தொடர்ச்சியாக 05 வருடங்கள் சேவையாற்றியதன் பின்னர் மாவட்ட / மாகாண மட்டத்திலான இடமாற்றங்களுக்கான வாய்ப்பொன்றை அவர்களுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பின்வரும் நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்து கொள்ளும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கல்வி அமைச்சு (சகல பாடசாலைகளிலும் 6 ஆம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரை பாடசாலை பாடத்திட்டத்தில் 'தலைமைத்துவம்' எனும் பாடத்தை உள்ளடக்கி, ஒவ்வொரு பாடசாலையிலும் இப்பாடத்தை கற்பிப்பதற்கும் அத்துடன் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்கும்)
* நீர்ப்பாசனத் திணைக்களம் (கிராமிய நீர்ப்பாசனப் பராமரிப்பு)
* கமநல அபிவிருத்தி திணைக்களம் (கிராமிய விவசாய அபிவிருத்தி)
* வனசீவராசிகள் திணைக்களம் (வனசீவராசிகள் பாதுகாப்பு மற்றும் சமுதாயக் கருத்திட்டங்கள்)
* ஆயுர்வேத திணைக்களம் (ஆயுர்வேத பிரதேச வைத்தியசாலைகள்)
* சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் / மருந்தகங்கள்)
* நில அளவையாளர் அதிபதி திணைக்களம்
* விவசாயத் திணைக்களம் (பிரதேச விவசாய சேவைகள் மற்றும் தொழினுட்பவியல் சேவைகள்)
* ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் (சிறு ஏற்றுமதி பயிர்க் கருத்திட்டங்கள்)
* கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (கால்நடைப் பண்ணை அபிவிருத்தி)
* விலைமதிப்புத் திணைக்களம்
* குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்