• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டின் தீர்ப்பனவு செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பதற்கு ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ள
- முன்னைய அரசாங்கத்தின் கீழ் பல்வேறுபட்ட அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட கருத்திட்டங்களின் இதுவரை தீர்ப்பனவுச் செய்யப்படாத பட்டியல்களை தீர்ப்பனவு செய்வதற்கும் அத்துடன் பராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன்பெறல் எல்லைகளுக்குள் உள்ளடக்கப்படாத வௌிநாட்டு மூலங்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியங்களைப் பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் செலவினத்தை கணக்கு வைப்பதற்கு 367 பில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாடு தேவைப்படுகின்றது. அதற்கிணங்க, கூறப்பட்ட நிதி ஏற்பாட்டைக் கிடைக்கச் செய்யும் பொருட்டு பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.