• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிரிதலே வனசீவராசிகள் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தை புனரமைத்தல்
- கிரிதலே வனசீவராசிகள் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் உத்தேசிக்கப்பட்ட புனரமைப்புச் செயற்பாடுகளானவை சுற்றாடல் முறைமை பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் கூறப்பட்ட கருத்திட்டத்தின் கால எல்லையானது 2021‑06‑30 ஆம் திகதியளவில் முடிவுறுத்தப்படவுள்ளது. உத்தேச புனரமைப்புச் செயற்பாடுகளானவை ஒரே கருத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படின் இக்கருத்திட்டத்தினை முடிவுறுத்தும் உரிய திகதிக்கு முன்னர் உரிய நிர்மாண செயற்பாடுகளைப் பூர்த்தி செய்தல் சாத்தியமற்றதென்று அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், ஆராய்ச்சி நிலையமொன்றாக கிரிதலே வனசீவராசிகள் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் தற்போதுள்ள கல்வி மற்றும் நிருவாக கட்டடங்களின் புனரமைப்பு, நவீன வசதிகளுடன் விடுதி கட்டடத்தின் புனரமைப்பு மற்றும்கல்வி கட்டடத் தொகுதியின் நிர்மாணம் ஆகிய மூன்று (03) பிரதான கூறுகளின் கீழ் 03 பெறுகைகளாக விலைமனுக்களை கோரியதன் பின்னர் உரிய புனரமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு வழங்கப்பட்டது.