• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை பாதிப்புகளை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் "முந்தெனி ஆறு ஆற்றுப்படுகை மற்றும் மட்டக்களப்பு வௌ்ளப்பெருக்கு அனர்த்த ஆபத்தை குறைப்பதற்குமான சாத்தியத்தகவாய்வுகளையும் விரிவான பொறியியல் திட்டங்களையும் தயாரிப்பதற்கான மதியுரைச் சேவைகள்
- காலநிலை பாதிப்புகளை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் முந்தெனி ஆறு ஆற்றுப்படுகையில் வௌ்ளப்பெருக்கு அனர்த்த ஆபத்தை குறைப்பதற்கான சாத்தியத்தகவாய்வுகள் மற்றும் விரிவான பொறியியல் திட்டங்கள் சார்பிலான மதியுரைச் சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் கட்டம் I ஆக சாத்தியத்தகவாய்வுகளை மேற்கொள்வதற்கு M/s.Egis Eau & SEP & Green Tech JV நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டும் கட்டம் I இனைப் பூர்த்தி செய்ததன் பின்னர் அதன் கட்டம் II இன் கீழ் விரிவான பொறியியல் திட்டங்களைத் தயாரிக்கும் மதியுரை ஒப்பந்தம் சார்பில் அதே நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டும் மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.