• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020/ 2022 ஆண்டுகளுக்காக திரவ பெற்றோலிய வாயு (LPG) வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல் - Litro Gas Lanka Ltd.,
- அரசுடைமையான கம்பனியொன்றாக உருவாக்கப்பட்ட Litro Gas Lanka Ltd., நிறுவனமானது திரவப் பெற்றோலிய வாயு பாவனையாளர்களின் சந்தைப் பங்கின் 75 சதவீதத்தினைக் கொண்ட திரவப் பெற்றோலிய வாயு வழங்குநராகும். அதற்கிணங்க, சந்தைக்கு தொடர்ச்சியான வழங்கலை உறுதிப்படுத்தி, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2020 மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து இரு (02) வருட காலப்பகுதிக்கு M/s. Litro Gas Lanka Ltd., நிறுவனம் சார்பில் 740,000 மெற்றிக்தொன் திரவ பெற்றோலிய வாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை M/s.Oman Trading International Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.