• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020‑03‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑11‑14 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் 520,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 680,000 பெரல் பெற்றோல் (92 Unl) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2020‑03‑15 ஆம் திகதியிலிருந்து 2020‑11‑14 ஆம் திகதி வரையிலான எட்டு (08) மாத காலத்திற்குள் மதிப்பிடப்பட்ட 520,000 பெரல் டீசல் (0.05 உச்ச சல்பர் நூற்றுவீதம்) மற்றும் 680,000 பெரல் பெற்றோல் (92 Unl) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை M/s. Petrochina International (Singapore) Pte. Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.