• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சார்பில் பராமரிப்பு மற்றும் அவசர இடரின்போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை வாடகைக்கு எடுத்தல்
- இலங்கையின் எரிபொருள் தேவையின் 70 சதவீதமானது இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் மூலம் வழங்கல் செய்யப்படுவதுடன், இந்த நோக்கம் கருதி கொழும்பு துறைமுகத்திற்கு வௌியேயும் அதற்கு உள்ளேயும் அமைந்துள்ள மூன்று எரிபொருள் இறக்கும் அமைவிடங்கள் உள்ளன. அவற்றில் கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.2 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள தனித்த மைய மிதவை முறைமைகளின் தொழிற்பாடும் பராமரிப்பும் விசேடமாக உருவாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் அவசர இடரின்போது உடனடியாக ஈடுபடுத்தும் கப்பலொன்றினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கிணங்க, உரிய சேவைகளை ஆற்றுவதற்கு வாடகை அடிப்படையில் அத்தகைய கப்பலொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.