• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத சேவையின் வினைத்திறனை விருத்தி செய்யும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மதியுரைச் சேவை
- புகையிரத சேவையின் வினைத்திறனை விருத்தி செய்யும் கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடனின் பகுதியானது இந்தக் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவையை வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டுடன் உரிய மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை Egis Rail நிறுவனம் அத்துடன் Egis International நிறுவனம் மற்றும் Greentech Consultants (Pvt.) Ltd., நிறுவனம் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட கூட்டு தொழில்முயற்சிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.