• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்தில் விரிவான ஒன்றிணைந்த பாதுகாப்பு அவதானிப்பு கெமரா (CCTV Camera) முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்
- துறைமுக மனையிடத்திற்கான சகல அணுகுபாதைகள், சரக்கு பண்டகசாலைகள், முனைவிடங்கள், திறந்த களஞ்சியப் பிரதேசங்கள், வீதிகள், சுற்றுவேலிகள் மற்றும் அலைதாங்கி நுழைவிடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு கெமரா முறைமை யொன்றை, அப்பிரதேசங்களில் இடம்பெறும் சகல செயற்பாடுகளையும் அவதானித்து, கண்காணித்து அத்துடன் பதிவு செய்துகொள்ளும் பொருட்டு தாபிப்பதற்கென இலங்கை துறைமுக அதிகாரசபையினால் பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தி உற்பத்தி திறனையும் வினைத்திறனையும் அதிகரித்து அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் வர்த்தக செயற்பாடுகளுக்கு உகந்ததான சூழலொன்று உருவாக்கப்படும். அதற்கிணங்க, அதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.