• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Epoetin தடுப்பூசி 4,000 IU - 5,000 IU நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 950,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் Epoetin தடுப்பூசி 4,000 IU - 5,000 IU நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 950,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை இந்தியாவின் M/s Reliance Life Science நிறுவனத்திற்கு 1.39 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட மொத்தச் செலவு மற்றும் கேள்வு விலையில் வழங்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.