• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் விடுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கிளிநொச்சியிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் விடுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை 450/4, லக்வில், புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் முகவரியில் அமைந்துள்ள M/s Wahid Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 185.61 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு (அரசாங்க வரி ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக பெறுமதி சேர்க்கப்பட்ட வரி கொடுப்பனவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சதவீதம் என்பனவற்றுக்கு உட்பட்டு) வழங்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.