• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகு ரக வாகனங்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டின் போது மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்க மருத்துவமனைகளில் வசதிகளை செய்தல்
– மோட்டார் வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ சான்றிதழ்களில் உள்ளடக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கான வசதிகளைக் கொண்ட கிட்டத்தட்ட 150 ஆதார வைத்தியசாலைகளும் மாவட்ட வைத்தியசாலைகளும் இந் நாட்டில் உள்ளன, இருந்தபோதிலும், அத்தகைய வைத்தியசாலைகளிலிருந்து மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படும் போது ஒரே இடத்திலிருந்து சகல சேவைகளையும் சேவை பெறுநர்கள் பெற்றுக் கொள்வது சாத்தியமற்றது. அதலால், இந்நோக்கம் கருதி அரசாங்க வைத்தியசாலைகளில் புறம்பான அலகொன்றை தாபிப்பது பொருத்தமுடையதாகுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் மூலம் தயாரிக்கப்படும் மாதிரியொன்றுக்கு இணங்க அரசாங்க வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் சேவை பெறுநர்களுக்கு அவர்களின் மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்கும் ஒரே இடத்தில் சகல சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் அரசாங்க வைத்தியசாலைகளில் வசதிகளுடன்கூடிய அலகினை தாபிக்கும் பொருட்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் அமைச்சரவைக்கு பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு, அத்தகைய வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்திற்கு வசதி செய்து சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கருத்திற்கொள்ளப்படும் மருத்துவ சான்றிதழை வழங்கும் பொருட்டு மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் வழங்கும் விதமொன்றில் 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தை திருத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.