• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் அகழ்வுகளின் மூலம் கிடைக்கப்பெறும் காரீயம் சார்பில் அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் மீது பெறுமதி சேர்க்கப்படும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- கஹட்டகஹ கிரபைட் லங்கா லிமிட்டட் நிறுவனமானது முழுமையாக அரசுக்கு உடமையான நிறுவக மொன்றாவதுடன் அதன் காரீய சுரங்கமகழ்வுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதற்குச் சொந்தமான கஹட்டகஹ காரிய சுரங்கத்திலிருந்து மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 65 தொடக்கம் 70 வரையான மெற்றிக்தொன் காரியம் மூலப்பொருள் வடிவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இலங்கையிலிருந்தான காரீய வழங்கலானது உலகச் சந்தை தேவைப்பாட்டின் கிட்டத்தட்ட 7% ஆக உள்ளது. இச்சூழ்நிலைகளின் கீழ், சர்வதேச சந்தையில் உணரப்படும் தாக்கமொன்றை ஏற்படுத்துவதில் எவ்வித வழியும் இல்லையென்பதுடன் ஆதலால் கஹட்டகஹ சுரங்கத்தின் அகழ்வின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும் காரீயத்திற்கான பெறுமதி சேர்ப்பனவு முழுமையாக அவசியமாகவுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அகழ்வின் பின்னர் வழங்கப்படும் காரீயத்தின் பெறுமதி சேர்ப்பனவு செய்முறைச் செயற்பாடு தொடர்பில் மாத்திரம் போட்டி விலைமனு முறைமையின் கீழ் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்களை கோரும் பொருட்டும் கருத்திட்ட குழுவொன்றினாலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினாலும் சமர்ப்பிக்கப்படும் பிரேரிப்புகளை மதிப்பிடுவதின் பேரில் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவுசெய்து பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டும் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.