• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தை மீளமைப்பதன் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
- அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க தொழில்முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் கொள்கைக்கு இணங்க கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தை மீளமைத்து அதன் கீழ் செய்யப்படாதுள்ள சகல ஆலைகளையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள ஓடு மற்றும் செங்கல் உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் ஒரு மாதத்தில் சுமார் 4 இலட்சம் ஓடுகள் மற்றும் செங்கற்கள் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, இந்த தொழிற்சாலைக் கட்டடத்தினதும் இயந்திரசாதனங்களினதும் முழுமையான உரிமையினை இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்திடம் வைத்துக் கொண்டு ஓடு மற்றும் செங்கல் உற்பத்தி செயற்பாட்டினை DSI கம்பனியின் துணைக்கம்பனியொன்றான சம்சன் ரஜரட்ட டைல்ஸ் பிறைவட் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.