• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100,000 கிலோ மீற்றர்களைக் கொண்ட மாற்று வீதி முறைமை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- பிரதான வீதிகள் மற்றும் அதிவேக பாதைகள் என்பவற்றுக்கு இலகுவாக செல்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக 100,000 கிலோ மீற்றர்களைக் கொண்ட மாற்று வீதி முறைமையினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 2019‑12‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, கடந்த பத்து (10) வருட காலப்பகுதிக்குள் எவ்வித மறுசீரமைப்பு களும் செய்யபடாத மற்றும் இனங்காணப்பட்ட வீதியினைப் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை, வீதியினைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவ, சந்தை போன்ற வசதிகளை அடைவதற்குள்ள ஆற்றல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் தகவுத்திறன்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வீதிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க, மாகாண சபைகளின் பங்குபற்றுதலுடன் உத்தேச நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் வௌிநாட்டு நிதிகளின் கீழ் வீதி அபிவிருத்திக்காக ஏற்கனவே நடைமுறையிலுள்ள கருத்திட்டங்களில் இருந்து இனங்காணப்பட்ட சில பிரிவுகளையும் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்து வதற்குமாக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.