• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-02-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜகல தொல்பொருளியல் ஒதுக்கத்தின் தொல்பொருளியல் மரபுரிமை முகாமைத்துவம்
- உஹன பிரதேச செயலகப் பிரிவுக்குரிய ரஜகலதன்னையில் சுமார் 1,025 ஏக்கர் காணியில் அமைந்துள்ள 'அறியாகர' விகாரை கட்டடத்தொகுதியின் தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த 593 இடங்கள் உள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் மிக முக்கியமாக கருதப்படும் இடங்களில் அகழ்வுகள் செய்யப்பட்டு பாதுகாத்து நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக இந்த பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பும் அதிகரித்துள்ளது.
தொல்பொருளியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மிக முக்கியமானதாகவுள்ள குறித்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு 2020 ஆம் ஆண்டு இறுதிவரை தொல்பொருளியல் திணைக்களமும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் இணைந்து ரஜகல மறுசீரமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாணபுமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.