• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம் நடாத்திச் செல்லப்படும் காணி மற்றும் கட்டடங்களை இந்த நிறுவனத்திற்கே கையளித்தல்
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனம் நடாத்திச் செல்லப்படும் திம்பிரிகஸ்ஸாய பிரதேச செயலகப் பிரிவின் கொழும்பு கறுவா தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் பேராசிரியர் நந்ததாச கோதாகொட மாவத்தையில் (நொரிஸ் கனல் வீதி) அமைந்துள்ள 0.2074 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி மற்றும் அதிலுள்ள கட்டடங்களை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இறையிலி கொடைப்பத்திரமொன்றின் மூலம் சட்டபூர்வமாக மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.