• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் உயர்கல்விக்கு வௌிநாட்டு மற்றும் வதிவற்ற இலங்கை மாணவர்களை ஈர்த்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் அடிப்படை பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக வருடாந்தம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 4.5 சதவீதம் வௌிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் நிலவினாலும்கூட வௌிநாட்டு மாணவர்கள் சிறிய எண்ணிக்கையினர் மாத்திரம் இந்நாட்டின் பல்கலைக்கழக கல்வி சார்பில் பதிவு செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கையை சர்வதேச அறிவு மையமொன்றாக மாற்றும் நோக்கில் வௌிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நூற்றுவீத எல்லைக்குள் கட்டணம் அறவிட்டு வௌிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக மேம்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் வௌிநாட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு வௌிநாட்டு நாணயத்தில் பாடநெறி கட்டணங்களைச் செலுத்தும் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் உலக பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக உலகில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களின் கிளைகளை நாட்டில் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.