• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு வருகை தருகின்ற அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்கின்ற வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பங்களை இலத்திரனியல் பயண அங்கீகார முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் பெற்ற முகவர்களை நியமித்தல்
- வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக முன் பரிசோதனை மற்றும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு இலத்திரனியல் பயண அங்கீகாரம் வழங்கும் முறையானது குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றது.
இலங்கை சீன சுற்றுலா பயணிகளினால் கவரப்பட்ட நாடொன்றாக இருந்தாலும் இலங்கையினால் பின்பற்றப்பட்டு வரும் இலத்திரனியல் பயண அங்கீகாரம் வழங்கும் முறையானது தற்போது ஆங்கில மொழியில் மாத்திரம் உள்ளதன் காரணமாக இலங்கைக்கு வருகை தரும் அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா பெற்றுக் கொள்ளும் போது சில சந்தர்ப்பங்களில் கால தாமதத்திற்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமை பற்றி தெரியவந்துள்ளது. இந்த நிலைமைக்கு மாற்றுவழியாக அந்நாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது விசா பெற்றுக் கொள்வதில் ஒத்தாசை நல்கும் பொருட்டு தனியார் முகவர் நிறுவனமொன்றின் சேவையினைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, பல நாடுகளுக்கு இந்த சேவையை வழங்கும் அனுபவம் மிக்க நிறுவனமொன்றான சீனாவின் செங்காய் நகரத்தில் அமைந்துள்ள Travelzen International Travel Service (Shanghai) Co. Ltd, கம்பனியின் சேவையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.