• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019/2020 பெரும் போகத்தில் நெல் கொள்வனவிற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
- 2019/2020 பெரும் போகத்திற்கான நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 3 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் கொள்கை ரீதியில் அரிசி இறக்குமதி செய்யப்படாததன் காரணமாக அரிசியின் விலை ஓரளவு அதிகரித்திருந்த போதிலும் இதன் மூலம் சுமார் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்கு இயலுமாகியுள்ளது. இந்த நிலைமை அந்நிய செலாவணி விகிதாசாரத்தை நிலையாக பேணுவதற்கும் அதேபோன்று வட்டி வீதம் குறைவடைவதற்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இதற்கிணங்க, நெல் விலையினை நிலையாக பேணுவதற்கும் சாதாரண விலைக்கு விவசாயிகளிட மிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கும் தனியார்துறை அரிசி ஆலை உரிமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2019/2020 பெரும் போகத்தில் மேலதிக நெல் தொகையினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, பின்வரும் நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் தீர்மானிக்கப்பட்டது.
* உரியதர மட்டத்திலுள்ள (ஈரத்தன்மை தொடர்பில் சிபாரிசு செய்யப்பட்ட மட்டத்திற்கு உட்பட்டு) நெல் கிலோ ஒன்றின் ஆகக்குறைந்த உத்தரவாத விலையினை 50/- ரூபாவாக நிர்ணயிப்பதற்கும்.
* ஈரத்தன்மையுடன் கூடிய நெல் கிலோ ஒன்றின் ஆகக்குறைந்த உத்தரவாத விலையினை 45/- ரூபாவாக நிர்ணயிப்பதற்கும்.
* அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும்.
* முப்படை, சிறைச்சாலைகள் திணைக்களம், வைத்தியசாலைகள் உட்பட அரசாங்க நிறுவனங்களின் அரிசி தேவைகளின் பொருட்டு அந்தந்த நிறுவனங்களே நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கும்.
* கொள்வனவு செய்யப்படும் நெற் தொகைகளை களஞ்சியப்படுத்துவதற்கு உணவு ஆணையாளருக்குச் சொந்தமான அனைத்து களஞ்சியங்களையும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் / அரசாங்க அதிபர்களுக்கும் உடனடியாக கையளிப்பதற்கும்.
* நெற் தொகைகளின் ஏற்றி இறக்கல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான லொறிகள் மற்றும் டிரக் வண்டிகளை பயன்படுத்துவதற்கும்.
* உத்தரவாத விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்வதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அதேபோன்று பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட நெல் கொள்வனவு செய்பவர்களுக்கு 8 சதவீத வட்டியின் கீழ் சுமார் 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட அடமான கடன்களை அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்குவதற்கும்.
* அரிசி உற்பத்தி செய்யும் பிரதான மாவட்டங்களான பொலன்நறுவை, அநுராதபுரம், குருநாகல், வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை கையாளும் பொறுப்புகளை அரசாங்க அமைச்சர்கள் சிலருக்கு கையளிப்பதற்கும்.
* மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்து வதற்குத் தேவையான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை சனாதிபதியின் செயலாளரினால் வௌியிடுவதற்கும்.