• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அஸர்பைஜானில் மரணமடைந்த மூன்று இலங்கை மாணவர்கள்
– 2020 01 09 ஆம் திகதியன்று அஸர்பைஜானின் தலைநகரான பாகு நகரத்திலுள்ள தொடர்மாடி வீடொன்றில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக மரணமடைந்த இலங்கை மாணவர்களின் உடல்களை அவசர நிலைமையொன்றாக கருதி இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தெஹரான் நகரத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தினால் அஸர்பைஜான் மேற்கு கெஸ்பியன் பல்கலைக் கழகத்துடனும் தெஹரானிலுள்ள அஸர்பைஜான் தூதரககத்துடனும் இணைந்து தேவையான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றமை பற்றி வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோன்று மனிதநேய அடிப்படையில் விசேட சந்தர்ப்பமொன்றாக கருதி இறந்தவர்களின் உடல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு செலவாகும் சுமார் 1.5 மில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் ஏற்கும் பொருட்டு வெளிநாட்டு உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.