• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறைக்கு புத்துயிரளிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள கடன் நிவாரணப் பொதி
– தமது தொழில்முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு புதிதாக கடன் பெறுவதற்கு இயலாமற் போதல், பெற்றுக் கொண்ட கடனை தொடர்ச்சியாக செலுத்துவதற்கு இயலாமற் போனதன் காரணமாக செயற்பாடற்றிருக்கும் கடன்களுக்கு பல்வேறுபட்ட கட்டணங்கள் மற்றும் மேலதிக வட்டி செலுத்த வேண்டி நேரிடுகின்றமை, பிணையாக வைக்கப்பட்ட தமது சொத்துக்கள் வங்கிகளினால் ஏலம் விடப்படுகின்றமை போன்ற காரணங்களினால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளகள் கடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் .
கடந்த காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உட்சிக்கல் வாய்ந்த வரிக் கொள்கை மற்றும் வங்கி சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் காரணமாக இவ்வாறு சரிவடைந்துள்ள நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின்பால் விசேட கவனம் செலுத்தி இந்த தொழில்முயற்சி துறையை கட்டியெழுப்புவதற்கு பிரேரிப்புகள் அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பான "சுபீட்சத்தின் நோக்கு" என்பதன் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க ஏற்கனவே செலுத்த முடியாமல் போயுள்ள கடன்களை அறவிடுவதற்காக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அதிமேதகைய சனாதிபதி அவர்கள் சகல வங்கிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
இதன் இரண்டாவது கட்டமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளினால் உரிமப்பத்திரம் பெற்ற வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 2019 12 31 ஆம் திகதியன்றுக்கு செயற்பாட்டு ரீதியிலுள்ள தவணைக் கடன்களின் அடிப்படைத் தொகையை செலுத்துவதற்கு கடன் பெற்றவரினால் செய்யப்படும் எழுத்துமூல கோரிக்கையின்மீது 2020 12 31 ஆம் திகதிவரை சலுகை காலமொன்றை வழங்குவதற்கும் செயற்பாட்டு ரீதியிலுள்ள கடன் தொகைகளின் தவணை பெறுமதியை அதிகரிக்காது சலுகை காலப்பகுதியின் பின்னர் கடனை மீள செலுத்தும் காலத்தினை நீடிப்பதற்கும் 2019 12 31 ஆம் திகதியன்றுக்கு செயற்பாடற்ற நிலையிலிருக்கும் கடனை அறவிடுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும் மொத்த தண்ட வட்டித் தொகையை பதிவளிப்பு செய்வதற்கும் கடனை செலுத்துவதற்கு இயலாமற் போனமையினால் முடங்கிய நிலையிலுள்ள தொழில் முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சலுகை நிபந்தனைகளின் கீழ் புதிதாக தொழிற்பாட்டு மூலதன கடன் தொகையினை வழங்குவதற்கும் இயலுமாகும் விதத்திலான ஏற்பாடுகளுடன் "கடன் சலுகை பொதி" ஒன்றினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.