• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உரக் கொள்வனவு
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் ஆகியவற்றுக்கு 15,000 மெற்றிக் தொன் யூரியா வழங்குவதற்கான கேள்வியை மெற்றிக் தொன் ஒன்று 279.68 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் மொத்த செலவான 4.40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு M/s Ameropa Asia Pte. Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.