• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
- 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயமானது 2001 ஆம் ஆண்டில் இலங்கை முதலீட்டுச் சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இது 28 தொழில்முயற்சிகளை உள்ளடக்கியதுடன் கிட்டத்தட்ட 23,300 தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போதுள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொ்ளளளவானது நாளொன்றுக்கு 9,500 கன மீற்றர் ஆக இருந்தபோதிலும், அங்கேயுள்ள கைத்தொழிற்சாலைகளினால் அண்ணளவாக நாளொன்றுக்கு 12,400 கன மீற்றர் கழிவுநீர் விடுவிக்கப்படுகின்றது. விடுவிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு தற்போதுள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமானது போதுமானதாக இல்லாதபடியால், ஏதேனும் பாதகமான சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவானது உடனடியாக விருத்தி செய்யப்பட வேண்டுமென்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இக்கொள்ளளவை நாளொன்றுக்கு 15,000 கன மீற்றர் ஆக விருத்தி செய்வதற்கு சீதாவக்க ஏற்றுமதி பதனிடல் வலயத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கருத்திட்டத்தின் விருத்தியை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.